வடமொழிச் சொற்களுக்கான எளிய தமிழ்ச் சொற்கள்

நூலிற்குள் செல்லுமுன் சில…

ஒரு மொழி காலத்தால் அழிக்கப்படாமல் இருக்க வேண்டுமானால் அதன் பயன்பாடு தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும். அறிவியலின் வளரச்சிப்போக்கிற்கு ஈடு கொடுத்து தன்னை படிமலர்சிக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும். பேச்சுவழக்கில் சொல் மறுவி நின்றாலும் பேச்சு வழக்கில் நிலை நின்றாக வேண்டும்.

ஆனால் தமிழ் மக்களின் நிலை தலைகீழாக இருக்கிறது. ‘பரிணாமம்’ (evolution) என்றச் சொல் டார்வின் தேற்றத்திற்குப் பிறகே உலகில் புகழடைந்த சொல்லாக ஆனது. அதாவது அச்சொல்லின் பயன்பாட்டுத் தேவை ஒரு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் இல்லை. அது ஒரு புத்தம் புதிய பொருளுடையதாக உலகில் புகழடைந்தது. அதற்குக்கூட தமிழ் மொழியில் அன்றிருந்த தமிழறிஞர்கள் புழக்கத்தில் ஒரு தமிழ்ச் சொல்லை பயன்படுத்தவில்லை. வடமொழிச் சொல்லான பரிணாமம் என்ற சொல்லையே பயன்படுத்தி வந்துள்ளனர். தமிழ் இலக்கியமே வடமொழியுடன் பின்னிப் பிணைத்து கிடக்கும்போது புதுச் சொல்லுக்கு இடமேது.

தும்மினாலும் வடமொழியில்தான் தும்மும் நிலையே தமிழனின் நிலை. அன்றாடப் பயன்பாட்டிற்குரிய எளிய தமிழ் சொற்களையும் மறந்துவிட்டனர் தமிழ் மக்கள்.

ஆயிரக்கணக்கில், தமிழ்ச் சொல்லாக தமிழர்களிடம் பிணைந்துவிட்ட வடமொழிச் சொற்களில் அன்றாடம் புழக்கத்தில் உள்ள வடசொற்களில் ஏறக்குறை 1500 சொற்களுக்கு குறையாது இந்நூலில் திரட்டித் தந்துள்ளேன். ஒருமுறை படியுங்கள். வடசொல்லை நீக்குவதும் நீக்கிவிட்டால் புரிந்துகொள்வதில் இடர்பாடு இருக்கும் என்ற மாயையும் உங்கள் மனதிலிருந்து அகலும்.

இந்நூல் புத்தாக்கம் செய்யும் பொழுதெல்லாம், நீங்களும் இந்நூலின் புத்தாக்கப் பதிப்பினை பயன்படுத்திக்கொள்ள குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வழியாக செய்தி அனுப்புகிறோம்.

இந்நூலுக்கு துணை செய்த தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக ஆய்வறிஞர் அய்யா ப.அருளி அவர்களுக்கும் இணையதளங்களில் வடசொற்களுக்கான தமிழ்ச் சொற்களை பதிவிட்டுள்ள அன்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி!

குற்றம் குறைகளிருப்பின் சுட்டிக்காட்டுங்கள். திருத்தம் செய்து கொள்கிறேன்.

இவன்

தொகுப்பாசிரியர்

சாகித்

கீழுள்ள வடசொல்லுக்கானத் தமிழ்ச் சொற்கள் அடங்கிய பட்டியலை மின்னூலக தரவிறக்கம் செய்து கொள்ள விரும்பினால் படத்திற்குக் கீழுள்ள பட்டனை சொடுக்குங்கள்.

×


வடமொழிச் சொற்களுக்கான எளிய தமிழ்ச் சொற்கள்

வடசொல்

தமிழ்ச் சொல்

அகங்காரம்

செருக்கு, இறுமாப்பு, முனைப்பு, யானெனல்

அகசுமாத்து, அகஸ்மாத்து

தற்செயல், திடீரெனல்

அகதி

வறியன், யாருமற்றவன், தாய்நாடு துறந்தவர்

அகந்தை

இறுமாப்பு, செருக்கு

அகம்பாவம்

தற்பெருமை, செருக்கு

அகராதி

அகரவரிசை, அகரமுதலி

அகற்பிதம்

இயல்பு

அகாதன்

புரட்டன்

அகாலமரணம்

முதிராச்சாவு

அகாலம்

தகாக் காலம்

அகிம்சை

இன்னா செய்யாமை,கொல்லாமை

அகிலம்

எல்லாம், உலகு, வையம், நிலம்

அகோசரம்

அறியொணாதது

அகோரம்

சினக்குறிப்பு, நடுக்கம்

அகோராத்திரம்

அல்லும் பகலும்

அக்காரம்

வெல்லம்

அக்கி கண்,

கொப்புளம்

அக்கிரகாரம்

பார்ப்பனச்சேரி

அக்கிரமம்

ஒழுங்கின்மை, முறைகேடு

அக்கிராசனம்

முதலிருக்கை, தலைமை

அக்கிராசனாதிபதி

அவைத் தலைவர், முதல்வர்

அக்கினி

நெருப்பு, தீ, அனல், எரி, தழல்

அக்கினி நட்சத்திரம்

தீ நாள்

அக்கினிகாரியம்

எரியோம்பல்

அங்க சேட்டை

உறுப்பு அசைவு

அங்கம்

உறுப்பு, உடல்

அங்கம்

உறுப்பு, எலும்பு, அடையாளம்

அங்கவீனன்

உடற் கேடன், உறுப்பறையன்

அங்கீகரணம், அங்கீகாரம்

உடன்பாடு, ஒப்புதல்

அங்கீகரி

ஒப்புதல் அளி, ஏற்றுக்கொள்

அங்குசம்

யானைத்தோட்டி, கொக்கி

அங்குட்டம்

பெருவிரல்

அங்குலம்

விரற்கடை, விரலளவு

அசந்தர்ப்பம்

நேரமின்மை, காலத்தவறு, வாய்ப்பின்மை

அசமந்தம்

சோம்பல், மடி, மலைவு

அசம்

ஆடு

அசம்பாவிதம்

நேரக்கூடாத, நிகழக்கூடாத

அசரீரி

உருவற்றது, வானொலி

அசல் (இந்துஸ்தானி )

முதல், மூலம்

அசாத்தியம்

அருமை, முடிக்கக் கூடாதது, முடிக்கக் முடியாதது, நிறைவேற்ற முடியாத, இயலாது, அருஞ்செயல்

அசிங்கம்

அழகின்மை, தூய்மைக் கேடு, அருவருப்பு, ஓழுங்கின்மை

அசுத்தம்

அழுக்கு, துப்புரவின்மை, தூய்மையின்மை

அசுபம்

நன்மையல்லாதது, தீமை, தீயது

அசுவம்

குதிரை

அசௌகரியம்

வசதியின்மை, வாகின்மை

அசௌகரியம்

தொந்தரவு / தொல்லை

அசௌக்கியம்

துன்பம், தொல்லை

அஞ்சனம்

மை, கறுப்பு

அஞ்ஞாதம்

மறைவு

அஞ்ஞாதவாசம்

மறைந்துறைதல், மறைந்து வாழுதல்

அஞ்ஞானம்

அறியாமை, இருள், மருள்

அட்சரம்

எழுத்து

அட்டகம்

எண்வகை

அட்டகாசம்

புரளி

அணிமா

அணுத்தன்மை

அதர்மம்

அறக்கேடு

அதிகாந்தம்

பேரழகு

அதிகாரம்

இயல், நூற்கூறு, பாடு, ஆட்சி

அதிசயம்

புதுமை, வியப்பு

அதிட்டம்

செல்வம், நல்வினைப் பயன், நன்னுகர்ச்சி

அதிதி

விருந்தினன், புதியவன்

அதீத

வரம்பு கடந்த, அதிக, மிகுதியான

அதோகதி

கீழிறக்கம், பள்ளம்

அத்தமனம், அஸ்தமனம்

மறைவு

அத்தம், அஸ்தம்

கை

அத்தி, அஸ்தி

எலும்பு

அத்திபாரம், அஸ்திபாரம்

அடிப்படை, கடைக்கால்

அத்தியட்சன்

தலைவன், கண்காணி

அத்தியந்தம்

மிகுதி, மட்டற்றது

அத்தியாயம்

படலம், நூற்பிரிவு

அத்திரம், அஸ்திரம்

அம்பு

அத்துவிதம்,அத்துவைதம்

இரண்டற்றது

அநந்தம்

அளவின்மை, முடிவில்லத

அநர்த்தம்

பயனின்மை, கேடு, வேறுபாடு

அநவரதம்

எப்பொழுதும்

அநாகதம்

நெஞ்சம்

அநாதி

முன், பழமை, கடவுள்

அநாதை, அனாதை

யாருமற்றவன்

அநியாயம்

அநீதி முறையின்மை, நடுவின்மை, விலக்கு, நேர்மையற்ற

அநிருதம்

பொய்

அநுகூலம்

கை கூடுதல், பயன், உதவி, நன்மை, துணை

அநுக்கிரகம்

அருளிரக்கம், அருள்

அநுசரித்தல்

பின் பற்றல், கைக்கொள்ளல்

அநுதினம்

நாடோறும், ஒவ்வொரு நாளும்

அநுபந்தம்

பின் சேர்க்கை, தொடர்ச்சி, அடுத்து யாக்கப் படுவது

அநுபவம்

பழக்கம், நுகர்ச்சி, அழுந்தியறிதல்,பட்டறிவு

அநுபவித்தல்

துய்த்தல், நுகர்தல், துவ்வல்

அநுபானம்

துணை மருந்து, கூட்டு மருந்து

அநுபோகம்

பழக்கம், வழக்கம், ஆட்சி, நுகர்ச்சி, துய்ப்பு

அநுமதி

உடன்பாடு, உடன்படு, விடை, கட்டளை, ஆணை, ஒப்புதல், ஏற்றுக்கொள்

அநுமானம்

ஐயம், வழியளவை, கருதுகோள்

அநுஷ்டானம்

செயற்பாடு, நடைமுறை

அநுஷ்டித்தல்

பின்பற்றல்

அநேக

பல, பெரும்பான்மை, ஏராளமான

அநேகமாய்

பெரும்பாலும்

அநேகம்

பெரும்பான்மை, பல

அந்தம்

ஈறு, முடிவு, இறுதி, எல்லை

அந்தப்புரம்

உளவகம், மகளிர் உறைவிடம்

அந்தரங்கம்

கமுக்கம், உள்கருத்து, உள்ளம், மறை பொருள், தனிமை

அந்தி

மாலை

அந்தகன்

கூற்றுவன், குருடன்

அந்தரம்

வான், வெளி, இடை வெளி, துணையின்மை, காலம்

அந்தரவாணி

வானொலி

அந்தஸ்த்து, அந்தஸ்து

நிலை, நிலைமை, மேனிலை, தகமை, ஒழுங்கு

அந்நியம்

அயல், வேறு, வேற்றுமை, பிறிது

அந்நியோந்நியம்

நெருக்கம், ஒற்றுமை, ஒருவர்க்கொருவர்

அபகரித்தல்

கவர்தல், கொள்ளையிடல், பறித்தல், வவ்வல்

அபகாரம்

தீங்கு, பொல்லாங்கு, நன்றியில் செயல்

அபசயம்

தோல்வி

அபத்தம்

பொய், தவறு

அபயம்

அடைக்கலம்

அபரஞானம்

கருவியறிவு, நூலறிவு

அபராதம்

ஒறுப்புக்கட்டணம், குற்றம், பிழை

அபவிருத்தி

குறைவு

அபாண்டம்

பெரும் பொய், பெரும்பழி, இடுபழி

அபாயம், அபாயகரம்

பேரிடர், பேரிடைஞ்சல், அழிவு, கேடு, துன்பம், இடுக்கண்

அபானவாயு

மலக்காற்று

அபிடேகம், அபிஷேகம்

திரு முழுக்கு, புதுப்புனலாட்டு

அபிநயம்

உள்ளக்குறி காட்டல், கை மெய் காட்டல், கூத்து

அபிப்பிராயம்

நோக்கம், எண்ணம், உட்கருத்து, உட் கோள், உள்ளப்போக்கு, கொள்கை

அபிமானம்

தன்பற்று, பற்று, பற்றுள்ளம்

அபிமானம்

பற்று, நேயம்

அபிவிருத்தி

பெருக்கம், ஆக்கம், வளர்ச்சி

அபூர்வம்

அருமை, அரிய பொருள்

அபேட்சை

அவா, விருப்பம்

அபேதம்

வேற்றுமையின்மை, வேறன்மை

அப்பியாசம்

பழக்கம், பயிற்சி

அப்பிராணி

ஏழை, கரவிலான், பேதை

அமரபக்ஷம்

தேய்பிறை

அமல்படுத்து

நடைமுறைப்படுத்து

அமாவாசை

புதுப்பிறை, பிறை, யுவா

அமுது

சோறு, அடிசில், இனிமை

அமுல்

நடைமுறை (படுத்து), நிறைவேற்று

அம்சம்

கூறு, வகை, முறை, பிரிவு, நற்பொருத்தும், சிறப்புக்கூறு, அழகு

அம்பாரம்

குவியல்

அம்பிகை

தாய், அம்மை

அயச் செந்தூரம்

இரும்புச் செந்தூள்

அயபஸ்பம்

இரும்பு வெண்ணீறு

அயோக்கிதை

தகுதியின்மை, தகாதது

அரங்கம்

மேடை

அரசாங்கம்

அரசு

அரம்பை,

ரம்பை தெய்வப் பெண், அரிவை, வான்மகள்

அரவம்

ஒலி, பாம்பு

அராகம்

விருப்பு

அருணோதயம்

வைகறை, விடியல், கதிரோன் வருகை

அருத்தம், அர்த்தம்

பொருள்

அருவம்

உருவின்மை, அழகின்மை

அர்ச்சனை, அருச்சனை

பூ வழிபாடு, மலர் தூவழிபாடு

அர்த்தசாமம்

நள்ளிரவு

அர்த்தநாரீசுரன்

மங்கை பங்கன், மாதிருக்கும் பாதியன்

அர்ப்பணம்

நீரொடு கொடுத்தல், உரிமைப்படுத்தல், ஒப்புவித்தல்

அலங்காரம்

அழகு, ஒப்பனை, அணி, புனைவு

அலட்சியம்

பொருட்படுத்தாமை, கருத்தின்மை

அலமாரி

நிலைப்பேழை

அலுவா

கோதுமைத் தேம்பாகு

அவகாசம்

கால நீட்டிப்பு

அவகாசம்

ஒழிவு, ஓய்வு

அவசரம்

விரைவு, முடிக்கம், சடுத்தம்

அவசரம்

விரைவு, பரபரப்பு, சுருக்கு, பதைப்பு

அவசியம்

முதன்மை, கட்டாயம், இன்றியமையாமை, தேவை

அவதாரம்

உலகில் பிறத்தல், பிறப்பு, இறங்குகை

அவதானி

நினைவிலிருத்து

அவதி

துயர், துன்பம், தொல்லை

அவதூறு

பழிச்சொல்

அவமானம்

மானக்கேடு, புகழின்மை, இழிவு, களங்கம்

அவயவம்

உறுப்பு

அவலம்

இழிவு

அவஸ்தை

நிலை, துன்பம், நிலைமை

அற்பம்

சிறுமை, அணு, புன்மை

அற்புதம்

புதுமை, வியப்பு, அருள் நிகழ்ச்சி, அரிய செயல்

அனுபவம், அநுபவம்

நுகரச்சி, பட்டறிவு, துய்ப்பு, வினையறிவு

அனுபோகம்

நுகர்ச்சி

அனுமதி

இசைவு ஏற்பு, உடன்படு, ஒப்பு

அனுமானம்

கருதுகை, ஐயுணர்வு

அனேக

பல, பெரும்பான்மை, ஏராளமான

அனேகமாய்

பெரும்பாலும்

அன்னசத்திரம்

ஊட்டுப்புரை

அஜாக்கிரதை

விழிப்பின்மை, எச்சரிக்கையற்ற, கருத்தின்மை, அசட்டை

அஸ்தி

எலும்பு, (வழக்கில் – எலும்பின் சாம்பல்)

அஜீரணம்

பசியின்மை, செரியாமை

ஆகாசம், ஆகாயம்

விண், வெளி, வான், விசும்பு, வானம்

ஆகாயவிமானம்

வானவூர்தி

ஆகாரம்

உணவு, அடிசில்

ஆகுலம்

ஆரவாரம், வருத்தம்

ஆக்கிரமிப்பு

வலிந்து கைப்பற்று, வலிந்து கைகொள்

ஆக்கிராணம்

மூக்கு

ஆக்ஞேயம்

புருவநடு

ஆக்ஞை

ஆணை, கட்டளை

ஆங்காரம்

இறுமாப்பு, செருக்கு, தருக்கு

ஆசங்கை

ஐயம்

ஆசமனம்

குடித்தல்

ஆசர், ஆஜர் (உருது)

நேர் வருகை

ஆசனம்

இருக்கை, அணை

ஆசனவாய்

எருவாய், மலவாய்

ஆசாபாசம்

அவாக்கட்டு, அன்பு, உலகப்பற்று

ஆசாமி (உருது)

ஆள்

ஆசாரம்

ஒழுக்கம், வழக்கம், நன்னடை, துப்புரவு

ஆசியம்

எள்ளல், நகை, சிரிப்பு

ஆசிரமம்

பள்ளி, பாழி, முனிவர் உருறையுள்

ஆசீர்வாதம்

வாழ்த்துரை

ஆசை

விருப்பம், அவா, பற்று, வேட்கை, விழைவு

ஆச்சரியம்

புதுமை, வியப்பு, இறும்பூது

ஆடம்பரம்

ஆரவாரம், பகட்டு

ஆட்சேபம்

தடை, மறுப்பு, எதிர்ப்பு, எதிர்மொழி

ஆதங்கம்

ஆற்றாமை, மனப்பொருமல், மனவேக்காடு

ஆதரவு

துணை, உதவி, சார்புப்பயன், பற்றுக்கோடு, நிலைக்களன்

ஆதாயம்

வரும்படி, ஊதியம், பயன்

ஆதாரம்

பற்றுக்கோடு, நிலைக்களன், களைகண், சான்று, அடிப்படை

ஆதி

முதல், பழமை, அடி, தொடக்கம், காரணம், எழுவாய், கடவுள்

ஆதிக்கம்

அடக்குமுறை, மேலீடு, தலையீடு

ஆதியந்தம்

அடிமுதல், முதலும் முடிவுமாய்

ஆதியோடந்தமாய்

ஒன்றும் விடாமல், முதலிலிருந்து கடைசிவரை

ஆதிரம்

நெய்

ஆதுலம்

வறுமை

ஆத்திரம்

விரைவு, பரபரப்பு, சினம்

ஆத்துமா,

ஆன்மாஉயிர்

ஆநந்த பரவசம்

இன்பவயம்

ஆநந்தம்

இன்பம்

ஆந்திரதேசம்

தெலுங்கு நாடு

ஆபத்து

இடர், துன்பம், இக்கட்டு, ஊறுபாடு, பேரிடர், கடுந்தொல்லை,

ஆபாசம்

அருவருப்பு, இழித்துரை, முறைதவறு

ஆப்தம்

அன்பு, நட்பு

ஆமோதித்தல்

உடன்படல், வழி மொழிதல், மகிழ்தல்

ஆயத்தம்

முன்னேற்பாடு, அணியம்

ஆயத்தம்

முன்னேற்பாடாக, அணியம்

ஆயத்தம் (ஹிந்தி)

முயற்சி, முன்னேற்பாடு

ஆயாஸம்

களைப்பு, இளைப்பு, சோர்வு, அயர்வு, மயக்கம்

ஆயுசு, ஆயுள்

வாழ்நாள், ஆண்டு

ஆயுதம்

ஆய்தம், கருவி, படைக்கலன், படைக்கருவி

ஆயுதம்

கருவி, படைக்கலம், படை, வாள்

ஆரணியம்

காடு

ஆரம்

பூமாலை, தொடையல்

ஆரம்பம்

துவக்கம், தொடக்கம்

ஆராதனை

வழிபாடு

ஆராதித்தல்

வழிபடுதல்

ஆரியம்

வடமொழி

ஆரியர்

மிலேச்சர்

ஆரூடம்

முன்னறிதல்

ஆரோகம்

ஏற்றுதல்

ஆரோக்கியம்

நலம், நோயின்மை

ஆலயம்

கோயில்

ஆலிங்கனம்

தழுவல்

ஆலோசனை

சூழ்ச்சி, சூழ்தல், ஓாவு, எண்ணம், ஆராய்ச்சி

ஆவசியம்

கட்டாயம், முதன்மை, இன்றியமையாமை

ஆவலாதி

புறங்கூற்று, புறந் தூற்றல்

ஆவேசம்

திடுஞ்சினம், மருள், தெய்வமேறல், உட்புகல், பேய்,

ஆஸ்தி

பொருள், செல்வம்

ஆஸ்திகன்

கடவுட் கொள்கையன்

ஆஸ்பத்திரி

மருந்துச்சாலை, மருத்துவமனை

இகம்

இவ்வுலகம், இவ்விடம், இப்பிறப்பு

இக்கணம்

இப்போது

இச்சகம்

முகமன்

இச்சை

விருப்பம், அவா, விழைவு, வேட்கை

இடங்கம்

உளி

இடபம்

எருது, காளை, ஏறு

இடம்பம்

ஆரவாரம், வீண் பெருமை

இட்டம், இஷ்டம்

அன்பு, விருப்பம்

இதம், ஹிதம்

இனிமை, நன்மை, அன்பு, அறம்

இதரம்

வேறு, அயல், அறிவு, பகைமை

இதாதீதம்

நன்மை தீமை

இந்திரியங்கள்

ஐம்பொறிகள்

இமிசை

கடுந்துன்பம், வருத்தம்

இயந்திரம்

பொறி, மறை மொழித் தகடு

இயமன்,

எமன் கூற்றுவன், காலன், மறலி

இரகசியம்

மறைபொருள், மறை, அற்றம்

இரசம்

சாறு, மிளகு நீர்

இரசவாதம்

பொன்னாக்கல்

இரசாபாசம்

அருவருப்பு, ஒழுங்கின்மை

இரசிகன்

சுவைஞன்

இரசித்தல்

சுவைத்தல்

இரட்சித்தல்

காப்பாற்றல், புரத்தல், ஓம்புதல்

இரணவைத்தியம்

புண் மருத்துவம், அறுவை மருத்துவம்

இரதம்

தேர்

இரத்தம்

குருதி, செந்நீர்

இரத்தினம்

மாமணி, செம்மணி

இரம்பம்

ஈர்வாள்

இராகம்

இசை, பண், அவா

இராசதம்

மனவெழுச்சி

இராசி

ஓரை

இராச்சியம்

அரசியல், நாடு

இராணுவம் –

போர்ப்படை

இராத்திரி

இரவு, கங்குல்

இராஜதானி

அரசுத் தலைநகர்

இராஜஸ்ரீ

திரு

இராஜா

அரையன், மன்னன்

இராஜ்சியம்

அரசு

இருசால்

இறைப்பணம், திறை

இருடி

முனிவன், தவசி, துறவி

இருதயம், இதயம்

நெஞ்சம், உள்ளம், அன்பு

இருது சாந்தி

பூப்புக் கழிப்பு

இருது, ருது

பருவம், மகளிர் முதற் பூப்பு

இருதுமங்களஸ்நானம்

பூப்பு நன்னீராட்டு

இரேகை

வரி, எழுத்து, கை யிறை, நிறை, தொடர்

இலகான் (இந்துஸ்)

கடிவாளம்

இலக்கம்

எண்

இலக்குமி

திருமகள், அழகு, செல்வம்

இலஞ்சம்

கைக்கூலி, கையுறை

இலட்சணம்

அழகு, பார்வை

இலட்சம்

நூறாயிரம்

இலட்சியம்

குறிக்கோள்

இலட்சியம்

குறிக்கோள்

இலயம், லயம்

ஒடுக்கம், அழிவு

இலவசம்

நன்கொடை, மானியம், விலையின்மை

இலவணம்

உப்பு

இலவுகிகம்

உலகியல், உலகப் போக்கு

இலாகா

ஆட்சி, எல்லை

இலாகிரி

வெறி, மயக்கம்

இலாடம்

காற்பாளை

இலாபநஷ்டம்

கூடுதல் குறைதல், ஊதியமும் பொருட் கேடும், வருமானம் இழப்பு

இலாபம்

ஊதியம், மிச்சம், பேறு, வருமானம்

இலாயம்

குதிரைப்பந்தி, குதிரைத் தொழுவம்

இலாவாதேவி

கொடுக்கல் வாங்ககல், பண்டமாற்று

இலிங்கம்

குறி, அடையாளம்

இலேகியம்

பாகு மருந்து, இளகம்

இலேசு

மேலாடை

இனாம்

நன்கொடை, மானியம்

இஷ்டன்

நண்பன்

ஈசன்

தலைவன், ஆள்வோன்

ஈசானம்

வடகீழ்ப்பால், வடகீழ்திசை

ஈசுர நிச்சயம்

கடவுளுண்மை

ஈடணம்

விருப்பம்

ஈநம்

இழிவு, குறைபாடு, குறைவு

உகந்தது

ஏற்றது

உக்கிரம்

கடுமை, கொடுமை, உச்சி

உக்கிராணம்

களஞ்சியம், சரக்கறை (சரக்கு அறை)

உசிதம்

பொருத்தம், உயர்வு, சிறப்பு, மேன்மை, தகுதி, ஒழுங்கு

உச்சந்தம்

தணிவு

உச்சரிப்பு

எழுத்தோசை

உச்சி

மேடு, முகடு

உணர்ச்சிவசம்

உதயம்

காலை, விடியல், பிறப்பு, வெளிப்படல், தோற்றம்

உதரம்

வயிறு

உதாசீனம், உதாசினம்

புறக்கணி, இகழ், மதியாமை, பொருட்படுத்தாமை

உதாரணம்

எடுத்துக்காட்டு, சான்று

உதாரம்,

உதாரகுணம் வள்ளன்மை, தண்ணளி, ஈகைத் தன்மை

உதித்தல்

பிதற்றல், தோன்றுதல்

உதிரம்

குருதி

உதிரம்

செந்நீர், குருதி

உத்தமம்

மீச்சிறப்பு, மேன்மை, நற்பண்பு, நன்மை

உத்தமி

கற்புடையவள்

உத்தரம்

மறுமொழி

உத்தரம்

முகடு

உத்தரவு

கட்டளை

உத்தியோகம்

பணி, தொழில்

உத்திரவாதம்

பொறுப்பு, உறுதிமொழி

உத்தேசம்

கருத்து, மதிப்பு, ஏறக்குறைய, நோக்கம்

உத்வேகம்

மிக விரைவு

உந்நதம்

உயர்ச்சி, மேன்மை

உபகரணம்

கொடுத்தல், உதவிப் பொருள், கருவிப் பொருள்

உபகாரம்

வரவேற்பு, முகமன், வேளாண்மை, உதவி

உபசரித்தல்

பணிவிடை செய்தல், விருந்தோம்பல், மதிப்பளித்து பேணுதல், பேணுதல்

உபதேசம்

அருண்மொழி, அறிவுரை

உபத்தம்

கருவாய்

உபத்திரவம்

இடர், இக்கட்டு, துன்பம், வருத்தம், தடை

உபநதி

கிளையாறு

உபநயநம்

பூணூற்சடங்கு, வழி நடத்துதல், மூக்குக்கண்ணாடி

உபந்நியாசம்

சொற்பொழிவு

உபயோகம்

பயன்

உபவனம்

பூஞ்சோலை

உபாசனை

வழிபாடு, வணக்கம்

உபாதி

நோய், துன்பம்

உபாத்தியாயன்

ஆசிரியன், கற்பிப்போன், கணக்காயன்

உபாத்தியாயினி

கற்பிப்போள், ஆசிரியை

உபாயம்

சூழ்ச்சி, நொய்மை, எளிது, சிறிது

உபேட்சை, அசட்டை

விருப்பின்மை, வெறுப்பு

உயிர்ப்பிராணி

உயிர்ப்பொருள்

உருக்குமணி

பொன்மணி

உருசி, ருசி

சுவை

உருத்திராக்கம்

சிவமணி, அக்கு மணி

உரூபித்தல்

மெய்ப்பித்தல்

உரொக்கம்

கைப்பணம், இருப்பு, மொத்த இருப்பு

உரோகம்

நோய், ஒளியின்மை

உரோமம்

மயிர், முடி, குஞ்சி

உலகப்பிரசித்தி

எங்கும் பரந்த புகழ்

உலோகம்

வெள்ளி, பொன், செம்பு முதலியன

உலோபம்

ஈயாமை, இவறன்மை, கடும்பற்றுள்ளம்

உல்லாசம்

மகிழ்ச்சி, விளையாட்டு, உள்ளக்களிப்பு

உற்சவம்

திருவிழா, திருநாள்

உற்சாகம்

ஆவல்

உன்னதம்

உயர்ச்சி, உயர்வு, மேன்மை, பெருமை

உஷ்ணம்

வெப்பம், சூடு

ஊகம்

முன்கணிப்பு, கருதுதல்

ஊகித்தல்

நினைத்தல், ஓர்தல்

ஊதாரி

மீச்செலவாளி, வீண் செலவுக்காரன்.

ஊரும்

குறைவு, இழிவு

ஊர்ச்சிதம்

உறுதி, நிலைப்படுதல்

எக்கியம்

வேள்வி

எசமானன்

தலைவன், முதல்வன்

எதார்த்தம்

உறுதி, உண்மை

எதேச்சை

விருப்பம், இயற்கை

எவ்வனம்,

யௌவனம் இளமை, அழகு

எஜமானன்,

யஜமானன்தலைவன்

ஏக

ஒருமித்த, எல்லா

ஏகதேசம்

ஒரு பால், ஒருபுடை, சிறுபான்மை

ஏகம்

ஒன்று, தனிமை

ஏகாங்கி

தனியன், துறவி

ஏகாதிபத்தியம்

தனியரசாட்சி, உலக மேலாண்மை உரிமை

ஏகாந்தம்

தனிமை, ஒரு முடிவு

ஏடணை

விருப்பம்

ஏதம்

குற்றம், துன்பம், தீங்கு

ஏது

காரணம்

ஏனம்

பன்றி

ஐக்கியம்

ஒற்றுமை

ஐச்வரியம்

செல்வம், திரு

ஐதிகம்

உலகுரை

ஒளடதம்

மருந்து

ஒளபாசனம் வேள்வித்தீயோம்

புகை, உணவொழிநோன்பு, எரியோம்பல்

ஓமம், ஹோமம்

வேள்வி

கங்கணம்

காப்பு

கடகம்

வாள்

கடினம்

வன்மை, கடுமை, வருத்தம், கொடுமை

கடூரம்

கொடுமை

கட்சி, கஷ்சி

பக்கம், சார்பு

கணபதி

பிள்ளையார்

கணிதம்

கணக்கு

கண் திருஷ்டி

கண்ணேறு, கண்ணெச்சில்

கண்டம்

நிலப்பிரிவு, பிரிவு, துண்டு, கட்டி, மிடறு, கழுத்து

கண்டனம்

மறுப்பு

கதம்பம்

கூட்டம், மணப் பொருட் கூட்டு

கதி

தாழ்நிலை, கீழிறக்கம்

கநகம்

பொன்

கந்த மூலம்

கிழங்கு

கந்தம்

மணம், நாற்றம்

கந்துகம்

குதிரை, பந்து

கந்நிகை

மணமாகாதவள், இளம் பெண்

கந்மஷம்

அழுக்கு, தீவினை

கபம்

கோழை, சளி

கபோதி

குருடன்

கமலம்

தாமரை

கமிட்டி

குழு

கமிஷனர்

ஆணையர்

கமிஷன்

ஆணைக்குழு, பொறுப்பாண்மைக்குழு

கம்பீரம்

செருக்கு, உயர்தோற்றம், பெருமை, ஆழம்

கயிலாசம்,

கயிலாயம் சிவப் பேறு, நொடித்தான்மலை

கரகோஷம்

கைதட்டுதல்

கருடன்

கலுழன்

கருணை

அருள், இரக்கம்

கருத்தா

கர்த்தா தலைவன், வினை முதல், ஆக்கியோன், நூலாசிரியன்

கருமம்

வினை, தொழில்

கர்க்கடகம்

நண்டு

கர்ச்சனை

முழக்கம்

கர்ப்ப வதி

சூலி

கர்ப்பக்கிரகம்

அகநாழிகை, திரு உள் நாழிகை, கருவறை

கர்வம்

செருக்கு

கலசம்

குடம்

கலாசாலை

கல்லூரி

கலியாணம்

மணம், மன்றல்

கவி

செய்யுள், பாவலன், பாட்டு

கவுளி

பல்லி

கவுன்சிலர்

மன்ற உறுப்பினர்

கவுன்சில்

மன்றம், கலந்தாய்வு மன்றம்

கனம்

சுமை, பளுவு

கஷாயம்

மருந்துக் குடிநீர்

கஷ்ட சாத்தியம்

அரிதின்முடி

கஷ்டம்

துன்பம், வருத்தம்

காசம்

ஈளை நோய், இருமல் நோய்

காயம்

உடல், யாக்கை, வான்

காரகன்

செய்பவன்

காரியதரிசி

அமைச்சன், செயலாளன்

காரியஸ்தன்

செயலாளன்

காலக்கிரமம்

கால ஒழுங்கு

காலச்சேபம்

வாழ்க்கை, நாட் கழித்தல்

காலி

வெறுமை, வெற்றிடம், தீர்கை, இன்மை

காளம்

கருமை, முகில்

காஷாயம்

காவி

காஷ்டம்

விறகு

கிஞ்சுகம்

கிளி

கிடாரம்

கொப்பரை

கியாதி

புகழ், மேன்மை

கிரகசாரம்

கோள் நிலை, கோட்சாரம்

கிரகணம்

பற்றுதல், பிடித்தல்

கிரகம்

வீடு, கோள், பற்றுதல், பிடிப்பு

கிரகஸ்தம்

இல்லற நிலை

கிரகித்தல்

பற்றுதல், இழுத்தல், கவர்தல், உணர்தல்

கிரந்தம்

நூல்

கிரமம்

ஒழுங்கு, முறைமை

கிரயம்

விலை

கிராதன்

குறவன், வேட்டுவன்

கிராமம்

சிற்றூர்

கிரியை

தொழில், செயல், வினை, சடங்கு

கிரீடம்

முடி

கிருபை

அருள், இரக்கம்

கிருமி

நுண்ணுயிரி

கிருஷி

பயிர், உழவு, பயிர் செய்கை

கிருஷ்ணபக்ஷம்

தேய்பிறை

கிலம்

அழிவு

கிலேசம்

அச்சம், கவலை, துன்பம்

கிஸ்தி (இந்துஸ்)

திறை

கீணம், க்ஷணம்

கேடு, சிதைவு

கீதம்

இசை, இசைப்பாட்டு

கீர்த்தி

புகழ், இசை

குக்குடம்

கோழி

குஞ்சரம்

யானை

குணம்

இயல்பு

குதூகலம்

பெருங்களிப்பு, பெருமகிழ்ச்சி

குபேரன்

பெருஞ் செல்வன், செல்வக்கடவுள்

குமரி,

குமாரி நங்கை, மண மாகாப் பெண், புதல்வி, மகள்

கும்பகோணம்

குடமூக்கு

கும்பம்

குடம்

கும்பாபிஷேகம்

குடமுழுக்கு

குருபக்தி

ஆசானிடத்தன்பு

குரூபி

உருவிலி, அழகிலி

குரூரம்

கொடுமை, அஞ்சாமை, தறுகண், ஈரமின்மை, இரக்கமின்னமை

குரோதம்

உட்பகை, சினம்

குலசம்

நலம், நன்மை

குலஸ்திரீ

குலமகள்

குன்மம்

சூலை, வயிற்றுவலி

குஷ்டம்

தொழுநோய், பெரு நோய்

கூசுமாண்டம்

பூசுணி

கூபம்

கிணறு, கூவம்

கூர்மம்

ஆமை

கேலி

பகடி, இகழ்ச்சி

கைங்கரியம்

தொண்டு, பணி

கோதண்டம்

வில்

கோத்திரம்

குலம், வகுப்பு, மரபு

கோமயம்

ஆனீர், பசு மூத்திரம்

கோரம்

கொடுமை, அச்சம்

கோஷம்

முழக்கம்

கோஷ்டம்

கூட்டம், மணப் பொருள், பேரொலி

கோஷ்டி

கூட்டம், குழு

கௌரவம்

மேன்மை, பெருமிதம், மதிப்பு

சகடம்,

சகடுவண்டி

சகலம்

எல்லாம்

சகலர்

மும்மலக்கட்டினர், அனைவர்

சகவாசம்

கூடவிருத்தல், உடனுறைதல், பழக்கம், சேர்க்கை, நட்பு

சகன்

தோழன், கூட்டாளி

சகஜம்

இயற்கை, ஒற்றுமை, இயல்பு

சகாயம்

உதவி, துணை, நயம், நன்மை, மலிவு, பயன்

சகித்தல்

பொறுத்தல்

சகுனம்

குறி

சகோதரன்

உடன்பிறந்தான், தமையன், தம்பி

சகோதரி

உடன்பிறந்தாள், தமக்கை, தங்கை

சகோரம்

நிலாமுகிப்புள்

சக்கரதரன்

திருமால்

சக்கரம்

உருளை, வட்டம்

சக்கரவர்த்தி

தனியரசாள்வோன், மன்னர் மன்னன், அரசர்க்கரசன்

சக்தி

ஆற்றல், திறம், வலி

சக்தி

ஆற்றல், வல்லமை, வலி

சங்கடம்

இக்கட்டு

சங்கடம்

நெருக்கம், துன்பம், கேடு, வருத்தம்

சங்கதி

செய்தி

சங்கமம்

ஆறு கடலோடு கூடு மிடம், கூடுகை, இயங்கு திணைப்பொருள், அசைவன

சங்கற்பம்

நினைப்பளவு

சங்காரம்

அழித்தல்

சங்கிராந்தி

திங்கட்பிறப்பு, ஒன்றினின்று பிறிதொன்றின்கட் செல்லல்

சங்கீதம்

இசை

சங்கேதம்

குறியீடு, நினைவு

சங்கை

எண், ஐயம், அச்சம்

சங்கோசம்

கூச்சம், வெட்கம் உட்குதல்

சச்சிதானந்தம்

உண்மையறிவின்பம்

சஞ்சலம்

நிலையின்மை, நடுக்கம், துன்பம்

சஞ்சலம்

கலக்கம், கவலை, துன்பம், அசைவு

சஞ்சிதம்

ஈட்டியது, எஞ்சியது

சடுதி, சடிதி (இந்துஸ்)

விரைவு

சட்சுகண்

சண்டித்தனம்

முருட்டுத் தன்மை

சதா

எப்பொழுதும்

சதானந்தம்

இடையறாவின்பம்

சதுரம்

அறிவுடைமை, திறமை, நாற்பக்கம்

சத்தம்

ஓசை, ஒலி, சொல், ஏழு

சத்தியம்

உண்மை, ஆணை, மெய்

சத்திரம்

உணவுச்சாலை, ஊட்டுப்புரை, சாவடி, குடை

சத்து

ஊட்டம், சாரம், வலிவு, ஆற்றல்,

சத்துரு

பகைவன்

சத்துவம்

விறல், மெய்ப்படுதல்

சந்ததம்

எப்பொழுதும்

சந்ததி

வழிவழி, பிள்ளை, எச்சம், கால்வழி

சந்தர்ப்பம்

அற்றம், நேரம், வாய்ப்பு, பொருந்திய பொழுதமைவு, இடையிடநிலை

சந்தா

உறுப்புக் கட்டணம், முறைக்கட்டணம், கட்டுத்தொகை

சந்தியாவந்தனம்

காலை மாலை வழிபாடு

சந்திரன்

திங்கள், தண்கதிர், நிலவு, மதி, அம்புலி, பிறை

சந்து

முடுக்கு, இயங்கும் உயிர், தூது, பிளப்பு, பொருத்து, இரண்டு, மூட்டு

சந்துஷ்டி

மகிழ்ச்சி

சந்தோஷம்

மகிழ்ச்சி, உவகை, களிப்பு

சந்நிதி,

சந்நிதானம்திருமுன்

சந்நியாசம்

துறவு, துறவறம்

சந்நியாசி

துறவி

சபதம்

வஞ்சினம், ஆணை

சபம்,

ஜெபம்உருவேற்றல்

சபா,

சபை அவை, மன்றம், கழகம், அரங்கம்

சமத்தன்,

சமர்த்தன் வல்லவன், திறமையாளன்

சமத்துவம்

ஒத்த உரிமை, ஒன்று படல்

சமயம்

பொழுது, நேரம், காலம்

சமயோசிதம்

காலப் பொருத் தம், தக்க நேரம்

சமரசம்

ஒற்றுமை, ஒருமிப்பு, நடுவு நிலைமை

சமரசம்

பொது, வேறுபாடின்மை

சமர்பி

ஒப்படை

சமர்ப்பணம்

திருவளிப்பு, திருப்படையல், நல்லளிப்பு

சமஸ்கிருதம்

வடமொழி

சமஸ்கிருதம்

நன்றாகச் செய்யப் பட்டது, வடமொழி

சமஷ்டி

கூட்டைப்பு

சமாசம்

கழகம், கூட்டம்

சமாசாரம்

செய்தி

சமாதானம்

அமைதி, இணக்கம், தணிவு, உடன்பாடு, ஒப்புரவு தக்க விடை

சமாதி

கல்லறை, பிணக்குழி, பேசாதிருத்தல், இறப்பு

சமாநம்

உவமை, ஒப்பு, இணை

சமாளித்தல்

ஒப்பேற்று,

சமிஞ்சை

சைகை, அசைவு, தெரிகுறிப்பு, குறிகாட்டல்

சமீபம்

அருகு, அண்மை, மருங்கு, அருகில்

சமுகம்

நேர், திருமுன்

சமுச்சயம்

சம்சயம் கூட்டம், ஐயம்

சமுதாயம், சமூகம்

கூட்டம், மக்கள் திரள்

சமுத்திரம்

கடல்

சமேதம்

கூட இருத்தல்

சம்பத்து

செல்வம்

சம்பந்தம்

சம்பந்தம்

உறவு, பற்று, இயைபு, சார்பு, தொடர்பு, பொருத்தம்

சம்பவம்

நிகழ்ச்சி, செயல்

சம்பாதி

பொருளீட்டு, ஈட்டு, உழைத்தீட்டு

சம்பாதித்தல்

ஈட்டல், தேடல், தொகுத்தல்

சம்பாஷணை

உரையாடல்

சம்பிரதாயம்

தொன்று தொட்ட வழக்கு, முன்னோர் நடை, பண்டைமுறை

சம்பூரணம்

நிறைவு

சம்மதம்

உடன்பாடு, ஒப்பு

சம்ரக்ஷணை

பாதுகாப்பு

சம்ஸாரம்

குடும்பம்

சயநம்

படுக்கை, உறக்கம்

சயம்,

ஜெயம்வெற்றி

சயரோகம்

எலும்புருக்கி நோய்

சயிலம்

மலை

சரசம்

இனிய பண்பு, இனிய விளையாட்டு

சரசுவதி

கலைமகள், நாமகள்

சரணம்

அடைக்கலம், வணக்கம், கால், திருவடி

சரணாகதி

புகலடைதல், அடைக்கலம் புகுதல்

சரணாரவிந்தம்

திருவடித் தாமரை

சரம் மாலை,

அம்பு

சரவணம்

நாணல், பொய்கை

சராசரி

ஏறக்குறைய, பொதுவான

சரிதம், சரித்திரம்

வரலாறு

சரீரம்

உடல், யாக்கை, மெய்

சருமம்

தோல்

சருவம்

எல்லாம்

சரோசம்

தாமரை

சர்ச்சை

சச்சரவு

சர்ச்சை

சச்சரவு

சர்ப்பம்

பாம்பு

சர்வ சாதாரணம்

மிகப் பொது, மிக எளிது

சர்வ சாதாரணம்

மிகப் பொதுவில்

சர்வ சுதந்திரம்

முழுவுரிமை, முழு விடுதலை, அனைத்துரிமை, அனைத்துரிமைப் பேறு

சர்வகலாசாலை

பல்கலைக்கழகம்

சர்வமானியம்

இறையிலி

சர்வம்

முழுதுவதும்

சர்வாதிகாரி

முற்றதிகாரி, முழு அதிகாரி, அனைத்ததிகாரத்தான்

சர்வேஸ்வரன்

எப்பொருட்கும் இறைவன்

சலசம்

தாமரை

சலசாட்சி

தாமரைக்கண்ணி

சலதோஷம்

நீர்க்கோவை

சலநம்

அசைவு

சலம், ஜலம்

நீர்

சலிசு

மலிவு, வசதி, எளிது

சல்லாபம்

உரையாடல்

சவம்

பிணம்

சனம், ஜனம்

மக்கள், நரல்

சனனம், சன்மம்

பிறப்பு

சனி

காரி

சன்மார்க்கம்

நன்னெறி

சன்மானம்

பரிசு

சஷ்டியப்த பூர்த்தி

அறுபதாமாண்டு நிறைவு

சாகரம்

கடல்

சாக்கிரம்

நனவு

சாசனம்

முறி

சாசுவதம்

அழியாமை, அசையா நிலை, உறுதி, வீடுபேறு

சாட்சி

சான்று, சான்றாளி

சாட்சி

சான்று, கரி

சாட்சியம்

கூற்றுச் சான்று, சான்றாவணம்

சாதகம்

சார்புபயன், உதவு, வசதி, துணை

சாதம்

சோறு

சாதனம்

கருவி, இடம், பயிற்சி, உறுதிமுறி, அடையாளம்,

சாதனை

வினைத்திறன், வெற்றிப் பேறு, விடாப் பயிற்சி

சாதாரணமாக

பொதுவாக, எளிதாக

சாதாரணம்

பொது, எளிமை

சாதி

குலம்

சாதிக்க

நிறைவேற்ற

சாதித்தல்

நிலைநிறுத்தல், வெற்றிகொள்ளுதல்

சாதியாசாரம்

குல ஒழுக்கம்

சாது

துறவி

சாதுரியம்

திறமை, வன்மை

சாத்தியம்

இயலும், கைகூடுகை

சாத்திரம்

கலை, நூல்

சாத்மிகம், சாத்துவிகம்

அமைதித்தன்மை

சாத்வீகம்

நிறை நற்பண்பு, நற்பண்பு, பண்பிகம், நல்லணுகலான

சாந்தம்

அமைதி, பொறுமை

சாந்திரம்

நெருக்கம், திங்கட்டொடர்புடையது

சாபம்

தீமொழி, வசவு, வில்

சாமர்த்தியம்

வல்லமை, திறமை, கூறுபாடு

சாமார்த்தியம்

வல்லமை, திறமை, ஆற்றல்,

சாமானியம்

பொது, எளிமை

சாமான்

பொருள்கள், தட்டு முட்டுகள்

சாமி, சுவாமி

கடவுள், தலைவன், அடிகள்

சாமீப்பியம்

சிவனருகிருப்பு

சாம்ராச்சியம்

பேரரசு, அரசாளுகை

சாம்ராட்

மாவேந்தன்

சாயுச்சியம்

சிவப்பேறடைவு

சாயை

நிழல்

சாய்ங் காலம்,

மாலை, மறைவு, அடைவு

சாரதி

வலவன், ஒட்டுனன்

சாராம்சம்

சிறந்த பகுதி, ஒட்டு மொத்தம்

சாரீரம்

இனிய குரல், இன்னிசை, உடற்றொடர்பு

சாரூபம்

சிவனுருவம்

சாலோகம்

சிவவுலகு

சாவகாசம்

ஒழிவு, ஓய்வு, வசதி, விரைவின்மை

சாவதானம்

ஒழிவு, ஓய்வு, உன்னிப்பு

சாஷ்டாங்கம்

எட்டுறுப்பு

சிகரம்

தலை, மலை, உச்சி, முகடு, குவடு

சிகிச்சை, சிகித்சை

மருத்துவம்

சிகை குடுமி,

கூந்தல்

சிங்கம், சிம்ஹம்

அரிமா, ஏறு

சிங்காசனம்

அரியணை

சிங்காரம்

ஒப்பனை, திருத்தம், அழகு

சிங்குவை

வாய்

சிசு

குழந்தை, மகவு

சிசுருஷை

பணிவிடை

சிட்சை, சிக்ஷை

கற்பித்தல், கல்வி பயிற்றல், ஒறுத்தல்

சித்தம்

உள்ளம், நினைவு, கருத்து

சித்தரி

புனை

சித்தி

பேறு, ஆக்கம்

சித்திரம்

ஓவியம், படம்

சித்திரவதை

வன் கொலை, துன்புறத்தல்

சிநேகம்,

சிநேகிதம் நட்பு, கேண்மை

சிரஞ்சீவி

நீடுவாழ்வோன்

சிரத்தை

அன்பு, முதன்மை, உளத்திட்பம், விருப்பு

சிரம

பரிகாரம் துன்பம் நீக்கம்

சிரமம்

துன்பம், தொல்லை

சிரவணம்

கேள்வி

சிரார்த்தம்

இறந்த நாட்கடன்

சிருட்டி, சிருஷ்டி

படைப்பு, படைத்தல்

சிரேஷ்டம்

சிறப்பு

சிரேஷ்டன்

தலைவன், மூத்தோன்

சிலாகித்தல்

புகழ்தல்

சிலாக்கியம்

மேன்மை, நன்மை

சிலேட்டுமம்

சளி, கோழை

சிவிகை

பல்லக்கு

சிற்பம்

கற்றச்சு

சின்ன பின்னம்

உருக்குலைவு

சின்னம்

அடையாளம்

சீக்கிரம்

விரைவு, ஒல்லை, கடிது

சீடன்

மாணாக்கன்

சீண தசை

அழிவுகாலம், மழுக்கம்

சீதபேதி

வயிற்றளைச்சல்

சீதம், சீதளம்

குளிர்ச்சி

சீதனம்

மணக்கொடை

சீதோஷ்ணம்

தட்பவெப்பம்

சீமந்த புத்திரன்

தலைமகன்

சீமந்தம்

சூல்காப்பிடுஞ்சடங்கு

சீமந்தினி

பெண்மகள்

சீர்ணோத்தாரணம்

பழுது பார்த்தல்

சீலம்

ஒழுக்கம்

சீவசெந்து

உயிர்ப்பொருள்

சுகந்தம்

நறுமணம்

சுகம்

நலம், இன்பம்

சுகாதாரம்

நல்வழி

சுகிர்தம்

நன்மை

சுக்கிரவாரம்

வெள்ளிக்கிழமை

சுக்கிலபக்ஷம்

வளர்பிறை

சுக்கிலம்

வெண்ணீர், வெண்மை

சுதந்திரம்

உரிமை

சுதேசம்

தாய்நாடு

சுத்தம்

தூய்மை, துப்புரவு

சுந்தரம்

அழகு

சுபாவம்

தன்மை, இயற்கை, இயல்பு

சுபிஷம்

செழிப்பு

சுய

தன்

சுயபாஷை

தாய்மொழி

சுயம்

சொந்தமானது

சுயம்வரம்

தான் விரும்பும் மணம்

சுயார்ச்சிதம்

தான் தேடிய பொருள்

சுயேச்சை

தன் விருப்பம்

சுரம்

காய்ச்சல், வெப்பு நோய்

சுரஸம்

முறித்த சாறு

சுருதி

குரல்

சுலபம்

எளிது

சுவதந்திரம்

உரிமை

சுவர்க்கம்

துறக்கம், பேரின்ப வீடு

சுவர்ணம்

பொன்

சுவாசகாசம்

இளைப்பிருமல்

சுவாசம்

மூச்சு, உயிர்ப்பு

சுவாதிஷ்டானம்

கொப்பூழ்

சுவீகாரம்

தன தாக்குதல்

சுவேதம்

வெண்மை

சுழுத்தி

உறக்கம்

சூக்குமம்

நுண்மை, அணு

சூசிகை

ஊசி, யானை, துதிக்கை

சூதகம்

தீட்டு

சூரணம்

தூள்

சூரியன்

ஞாயிறு, பகலவன், கதிரவன், பரிதி, என்றூழ், கனலி, எல்லோன், வெயிலோன், வெய்யோன்

சூலம்

வேல்

சூன்யம்

பாழ், இன்மை, இல்பொருள்

செளகரியம்

நலம், எளிது

செளக்கியம்

நலம், மகிழ்ச்சி

செளந்தரம்

அழகு

செளஜன்யம்

நல்லிணக்கம்

சேகரி

ஒன்று திரட்டு, அணியஞ்செய், ஈட்டு

சேகரித்தல்

ஒன்று திரட்டுதல், ஒன்று சேர்த்தல், அணியஞ்செய்தல், ஈட்டுதல்

சேட்டை

குறும்பு, செய்கை

சேதம்

இழப்பு, சிதைவு, கேடு, அழிவு, பிளப்பு, பிரிப்பு

சேத்திரம்

திருக்கோயில், திருப்பதி

சேமம்

நலம், காவல், புதையல்

சேவகன்

காவற்காரன், போர் மறவன்

சேவித்தல்

தொழுதல், வணங்கல்

சேனாதிபதி

படைத்தலைவன், சேனைத் தலைவன்

சேஷம்

எச்சில், மிச்சம்

சேஷ்டன்

தமையன், மூத்தோன்

சேஷ்டை

குறும்பு, தமக்கை, அக்காள்

சைந்யம்

படை

சைலம்

மலை

சொப்பனம்

கனவு

சொற்பம்

கொஞ்சம்

சொற்பம்

சிறிய

சொஸ்தம்

நலம்

சோகம்

துயர், சோர்வு, சோம்பல், கூம்புகை

சோதரன்

உடன் பிறந்தான்

சோதனை

ஆராய்ச்சி, ஆய்வு, தேர்வு

சோதி, ஜோதி

ஒளி, விளக்கு

சோதிடர், சோசியர்

கோள் நூலார், காலக்கணிதர், குறிப்பாளர்

சோத்திரம்

செவி

சோபித்தல்

ஒளிர்தல், விளங்கல்

சோமவாரம்

திங்கட்கிழமை

சோமன்

திங்கள், மதி

சோலி (தெலு)

வேலை, தொழில்

சௌகரியம்

நலம், நலம்படச் செய்

சௌகரியம்

வசதி, மலிவு

சௌக்கியம்

நலம், நன்நலம், உடனலம்

சௌபாக்கியம்

நற்பேறு, பெரும்பேறு, உயர்பேறு

சௌபாக்கியவதி

செல்வி, திருமகள்

சௌரமானம்

சூரியமானம், பகல் வழியளவு

ஞாதி

சுற்றம்

ஞாநி, ஞானி

அறிஞன்

ஞாபகம்

நினைவு

ஞானம்

அறிவு, கல்வி, மெய்யுணர்வு, அருளறிவு

தகநம்

எரித்தல், சுடுதல்

தகவல்

செய்தி, குறிப்பீடு, நேர்விடை, விளக்கம்

தகாத

குற்றமான, கூடாத, அடாத

தக்கணம்

உடன், தெற்கு

தசாவதாரம்

பத்துப் பிறப்பு

தட்சிணாமூர்த்தம்

குருவடிவம், தென்முகக் கடவுள்

தட்சிணை,

தக்கணைகாணிக்கை

தண்டனை

ஒறுப்பு, ஆணை, கட்டளை

ததாஸ்து

அப்படியேயாகட்டும்

ததியோதரம்தயிர்ச்சோறு

தத்தம்

கொடுத்தல், ஈகை

தத்துவம்

உண்மை, மெய், பொருளியல் உண்மை

தநம், தனம்

செல்வம், பொருள், கொங்கை

தந்தம்

பல்

தந்தி

கம்பி, மின் செய்தி, ஆண் யானை

தந்திரம்

சூழ்ச்சி, நூல்

தபசு,

தவசுதவம்

தபால் (இந்துஸ்)

அஞ்சல்

தமரகம்உடுக்கை

தமாஷ் (இந்துஸ்)

பகடி, விளையாட்டு

தம்பதி

கணவனும் மனைவியும்

தம்பம், ஸ்தம்பம்

தூண்

தயவு, தயா,

தயை, அன்பு, இரக்கம், கண்ணோட்டம்

தயாரி

உருவாக்கு

தயார்

முன்னேற்பாடாக, அணியம்

தயிலம்

எண்ணெய்

தயை, தசா

ஊன், இறைச்சி

தரப்பு

பக்கம்

தரம்

தகுதி, மேன்மை

தரா நிலம்,

வையகம்

தராசு, திராசு

துலாக்கோல், நிறைகோல்

தரிசனம்

காட்சி, பார்வை, கண்

தரிசித்தல்

தரித்தல்

உடுத்துதல், அணிதல், பூணல், உடுத்தல், மேற்கொள்ளல்

தரித்திரம்

வறுமை, எளிமை, நல்குரவு, மிடி, இன்மை

தருக்கம்

அளவை, அளவை நூல்

தருணம்

வேளை, பொழுது

தருமம்

அறம்

தருவான்

செல்வன்

தர்மம்

தருமம்

தலம், ஸ்தலம்

இடம், கோயில்,

தலயாத்திரை

திருக்கோயிற் பயணம், திருக் கோயிற் செலவு

தற்காலியம்

நிலையற்றது

தற்சமயம்

இப்போது, இவ் வேளை

தற்போது

இப்போது, இப்பொழுது

தாசன்

அடியான், அடிமை

தாட்சணியம்

கண்ணோட்டம்

தாத்பரியம்

நயன்மை

தாநம், ஸ்தாநம்

இடம், இருக்கை

தாபரம், தாவரம்

நிலையியற் பொருள், நிற்பன, அசையாப் பொருள், மரஞ்செடி கொடி

தாபித்தல்

நிறுவுதல், நாட்டல், நிலைநிறுத்தல்

தாமசம், தாமதம்

தாழ்த்தல், அட்டி, மயல்

தாமதம்

காலம் தாழ்த்துதல், காலம் நீட்டல்

தாமம்

கயிறு, மாலை

தாம்பரபரணி

பொருநை

தாரதம்மியம்

ஏற்றத்தாழ்வு

தார்மீகம்

அறம்

தார்மீகம்

தார்மீகம்

அறவழி

தாற்பரியம்

கருத்துரை

தானம்

ஈகை, கொடை

தானியம்

கூலம்

திடம்

வன்மை, உறுதி,திண்மம்

திட்டி, திருட்டி

கண், பார்வை, கண்ணேறு

திதி

காத்தல்

திநம்,

தினம் நாள், ஞான்று

தியாகம்

கொடை, ஈகை, கைவிடல்

தியாகம்

தியானித்தல்

நினைத்தல், வழிபடல்

திரம், ஸ்திரம்

நிலை, உறுதி

திரயம்

மூன்று

திரவியம்

செல்வம்

திரவியம்

பொருள், செல்வம்

திராட்சை

கொடிமுந்திரி

திராவகம்

செய்நீர், சாரம்

திருத்தி, திருப்தி

மன நிறைவு, அமைவு, சால்வு

திருப்தி

மனநிறைவு

திருப்பி

திருஷ்டாந்தம்

சான்று, எடுத்துக்காட்டு, மேற்கோள்

திரோபவம்

மறைத்தல்

திலகம்

பொட்டு

திவ்வியம்

நேர்த்தி, இனிமை, மேன்மை

தினசரி

நாடோறும்

தீபஸ்தம்பம்

விளக்குத்தண்டு, கலங்கரை விளக்கம்

தீபாராதனை

ஒளியால் வழிபடுகை

தீரம்

வலி, துணிவு, திடம், மனத்திடம், விடாப்பிடி

தீரம்

கரை

தீரன்

வீரன், திண்ணியன், ஆண்டகை, திறனாளன்

தீர்க்கதரிசி

முற்காண்பறிவன், வருமுன் அறிபவன்

தீர்க்கதரிசி

முக்காலவுணர்வினன், மெய்க்காட்சியாளன்

தீர்க்கம்

தெளிவு

தீர்க்கம்

தெளிவு

தீர்க்கம்

தெளிவு

தீர்த்தம்

புனிதநீர், திருக்குளம்

தீர்மானமான

உறுதியான

தீர்மானமான

உறுதி

தீவாந்தரம்

தீவு, வெளி

தீவிரம்

விரைவு

தீவிரம்

விரைவு, கடுமை

தீவிரவாதி

கடும் பற்றாளன், கொள்கை பிடிப்பாளன்

துக்கம்

துன்பம், பரிவு, கவலை, வருத்தம், துயரம்

துதி, ஸ்துதி

வணக்கம், வழுத்துரை

துரிதம்

விரைவு

துரியம்

பேருறக்கம்

துரியாதீதம்

உயிர்ப்படக்கம்

துரோகம்

இரண்டகம், ஏமாற்றுகை, தீங்கு

துரோகம்

இரண்டகம், வஞ்சனை

துலாம்பரமாகச்

துவசம்

கொடி

துவாரம்

வாயில், புழை, துளை

துவேஷம்

பகை, வெறுப்பு

துஷ்டன்

தீயவன், பட்டி, வம்பன், பொல்லான், கொடியோன்

தூதர்

ஒற்றர், வேவுகாரர்

தூபம்

புகை

தூரதிருஷ்டிக் கண்ணாடி

தொலை நோக்காடி

தூரம்

சேய்மை, தொலைவு, எட்டாக் கை

தூஷணை

இகழ்ச்சி, பழி, பழிச்சொல்

தேகம்

உடல், யாக்கை, மெய்

தேகவியோகம்

சாக்காடு

தேகாப்பியாசம்

உடற்பயிற்சி

தேசம்

நாடு

தேசிய

தேசியம்

தேயு

அனல்

தேவபக்தி,

தெய்வபக்தி கடவுட்பற்று, கடவுளிடத்தன்பு. தெய்வநேயம்

தேவன்

இறைவன், தலைவன்

தேவஸ்தானம்

கடவுள் நிலையம், கோயில்

தேவாதீனம்

கடவுட்செயல்

தேவி

இறைவி, அரசி, தலைவி

தேஜசு

ஒளி

தைரியம்

உறுதி, திட்பம், ஊக்கம், அச்சமின்மை

தைலம்

எண்ணெய்

தொக்கு

மெய்

தோத்திரம்

வாழ்த்து, வழுத்து

தோஷம், தோடம்

குற்றம்

நக்கல்

நையாண்டி, கேலி, கிண்டல், பகடி, ஏகடியம்

நகல் (அராபி)

படி

நகுலம்

கீரி

நடராஜமூர்த்தி, நடராஜன்

கூத்தன், அம்பலவாணன்

நட்சத்திரம்

மீன், வெள்ளி, நாள்

நட்டம், நஷ்டம்

கேடு, இழப்பு

நதி

ஆறு, யாறு

நந்தர்

இடையர்

நந்தவனம், நந்தவனம்

பூந்தோட்டம், பூங்கா

நபர் (அராபி)

ஆள்

நமஸ்காரம்

வணக்கம்

நயம்

நன்மை

நயனம்

கண்

நரகம்

நிரயம், அளறு

நரன்

மாந்தன்

நர்த்தனம்

கூத்து

நவக்கிரகம்

ஒன்பது கோள்

நவதானியம்

ஒன்பது வகைத் தானியம்

நவநீதம்

வெண்ணெய்

நவீனம்

புதுமை

நனவுலகம்

நாகம்பாம்பு

நாசகரமான

பேரழிவான

நாசம்

அழிவு, கேடு

நாசி

மூக்கு

நாசுக்கு

நயத்திறம், நேர்த்தி

நாதம்

ஒலி, ஓசை, செம்பால், செந்நீர்

நாதன்

தலைவன்

நாநாவிதம்

பலவகை

நாபிதன், நாவிதன்

மயிர்வினைஞன்

நாமம்

பெயர்

நாயகன்

தலைவன்

நாயகி

தலைவி

நாராசம்

இருப்பாணி

நாரிகேளம்

தேங்காய்

நாஸ்திகன்

தெய்வமில் கொள்கையான்

நிக்கிரகம்

அழிக்கை, ஒழிப்பு

நிசி

இரவு

நிச்சயம்

உறுதி, மெய், துணிவு, திண்ணம்; தேற்றம்

நிதரிசனம்

கண்கூடு

நிதானம்

பொறுமை

நிதானம்

மதிப்பு

நிதி

நிதி

செல்வம், வைப்பு, பொருள்

நித்தியம்

நாடோறும், எப்பொழுதும், அழியாமை

நித்திரை

தூக்கம், துயில், உறக்கம், கண்படை

நிந்தனை

வசை, பழி, இகழ்

நிந்தனை

இகழ்ச்சி, பழிப்பு

நிபந்தனை

கட்டுப்பாடு

நிபந்தனை

கட்டுப்பாடு, உறுதி, ஏற்பாடு

நிபுணர்

தேர்ந்தவர், வல்லவர்,திறனாளர்

நிமித்தம்

பொருட்டு, காரணம்

நிமித்தம்

குறி, காரணம், பொருட்டு, அடையாளம்

நிமிஷம்

நொடிப்பொழுது, நொடி

நியதி

ஊழ், செய்கடன், முறை, ஒழுங்கு, பிறழா நிகழ்ச்சி

நியமம்

ஒழுங்கு, முறை, நெறி, நாட்கடன்

நியமனம்

கட்டளை, அமர்த்து

நியமனம்

கட்டளை, ஒழுங்கு

நியமித்தல்

அமைத்தல், ஏற்படுத்தல்

நியாயம்

நெறி, முறை, நடுநிலை

நியாயாதிபதி

முறைமன்றத் தலைவர், நடுவர்

நிரந்தரம்

முடிவற்றது, நிலையானது, அழிவற்றது, இடைவிடாது, தொடர்ச்சி

நிராகரி

தள்ளுபடி செய், ஏற்கமறு, புறக்கணி

நிராகரித்தல்

புறக்கணித்தல், மறுத்தல், ஏற்க மறுத்துல், தள்ளுபடி செய்தல்

நிருணயம்

உறுதி

நிருமூலம்

அடியற்றது, அழிவு, வேரோடு கல்லல்

நிருவாகம் கொண்டு

நடத்தல், பொருப்பு

நிருவாணம்

உடையின்மை, முண்டம், பற்றின்மை

நிரூபித்தல்

மெய்ப்பித்தல், நிலை பெறுத்தல்

நிர்ணயம்

முடிவு, தீர்க்கை, வரம்பிடு, எல்லையிடு, உறுதிபடுத்து

நிர்ணயித்தல்

முடிவுபடுத்துதல்

நிர்ப்பந்தம்

வலியுறுத்துதல், வற்புறுத்துதல், கட்டாயப்படுத்துதல்

நிர்ப்பந்தம்

நெருக்கம், தொல்லை, இடர், வலுகட்டாயம்

நிர்வகி

ஆளுதல், ஏற்று நடத்துதல், பொறுப்பாற்றுதல்

நிர்வாகசபை

செயற்பாட்டவை

நிர்வாகம்

மேலாண்மை, ஆளுகை, நடத்துகை

நிர்வாகி

பொறுப்பாளன், செயலாளன்

நிவர்த்தி, நிவிர்த்தி

விடுதலை, நீக்கம்

நிவாரணம்

துயரொழிப்பு, சீர்படுத்துதல்

நிஜம்

மெய், வாய்மை, உண்மை

நிஜம்

உண்மை, மெய்

நிஜாம்

அரசமைப்பு, பாளையம்

நிஷ்டூரம்

கொடுமை

நீசன்

கீழ்மகன், தாழ்ந்தோன்

நீதி

நெறி, முறை, அறம்

நீதிஸ்தலம்

முறைமன்றம்

நீர்க்கதரிசனம்

முற்காண்பறிவு, வருமுன் உரைத்தல்

நூதனம்

புதுமை, வியப்பு, புதியது

நேத்திரம்

கண்

நேர்தல்

பக்தி

இறையன்பு, பற்று

பகவதி

அறத்தேவி, கொற்றவை, மலைமகள்

பகவன், பகவான்

கடவுள், பெருமான்

பகிரங்கம்

வெளிப்படை

பகிஷ்காரம்

விலக்கு

பக்குவம்

தகுதி, நிலை

பங்கம்

சிறுமை, இழிவு, குறை, பழுது, சேறு, குற்றம்

பங்கஜம்

தாமரை, முளரி

பசு

ஆ, உயிர்

பச்சாதாபம்

கழிவிறக்கம், இரக்கம்

பச்சாத்தாபம்

கண்ணோட்டம், கழிவிரக்கம்

பஞ்ச பாதகன்

ஐம்பெருங்குற்றத்தான்

பஞ்சாட்சரம்

ஐந்தெழுத்து

பட்சணம்

தின்பண்டம்

பட்சம்

உருக்கம், அன்பு

பட்சி

பறவை, புள்

பட்டாபிஷேகம்

முடிசூட்டல்

பண்டம்

பண்டிகை

பெருநாள், திரு விழா

பண்டிதன்

புலவன், அறிஞன், மருத்துவன்

பதட்டம்

பதறுதல், விரைதல், அஞ்சல்

பதம்

சொல், விலை

பதவி

பொறுப்பு

பதார்த்தம்

சொற்பொருள், பொருள்

பதி

கடவுள்

பதிவிரதை

கற்பரசி

பதுமாவதி, பத்மாசநி

திருமகள்

பத்தர்

அன்பர், தொண்டர்

பத்தி, பக்தி

அன்பு, நேயம், பற்று

பத்தியம்

மருந்துணா, செய்யுள்

பத்திரம்

இலை, ஆவணம்

பத்திரிகை

செய்தித்தாள், செய்தி இதழ்

பந்தம்

உறவு, தொடர்பு, கட்டு

பந்தி

வரிசை, தொகுதி

பயங்கரம்

கொடுமை, அச்சம்

பயபக்தி

அச்சப்பற்று, ஒடுக்க வணக்கம்

பயம்

அச்சம்

பர்த்தா

கணவன்

பரதேசம்

பிறர்நாடு,

பரமகதி

வீடுபேறு, மேல்நிலை

பரம்பரை

கால்வழி, தலைமுறை

பரவசம்

தன்னுணர்வின்மை, மெய் மறத்தலை

பரஸ்பரம்

ஒன்றுக்கொன்றன், ஒருவர்க்கொருவர்

பராக்கிரமசாலி

ஆண்டகை

பரிகாசம்

பகடி, ஏளனம்

பரிகாரம்

கேடுவிலக்கம், கழுவாய், நீக்கு, மாற்று, மாற்று,

பரிசம்

ஊறு

பரிசீலனை

ஆய்வு, நோட்டமிடு, தேர்வு

பரிசுத்தம்

தூய்மை, துப்புரவு, மாசின்மை, புனிதம்

பரிசோதனை

நன்கு ஆராய்கை, சூழ்தாய்கை

பரிசோதித்தல்

ஆழ்ந்தாய்தல், கூர்ந்தாய்தல், சூழ்ந்தாய்தல்

பரிணாமம்

திரிபாக்கம், படிமலர்ச்சி

பரிதவித்தல்

துயருறுதல்

பரிதாபம்

இரக்கம்

பரிமாணம்

அளவு

பரிமாணம்

பரிமிதம்

அளவுபட்டது

பரிவர்த்தனை

பரிவர்த்னை

பண்டமாற்று

பரீட்சை

தேர்வு

பருவதம், பர்வதம்

மலை

பரோபகாரம்

உதவி, கைம்மாறு கருதா உதவி

பலம்

வலு, வலி, வலிவு, உறுதி

பலம்

பழம், வலிவு

பலவந்தம்

வலுக்கட்டாயம், வல்லடி

பலவந்தம்

வல்லடி, வலுக்கட்டாயம்

பலவான்

வல்லான், வலியவன்

பலவீனமான

வலிவின்மை, மெலிவு, அசதிநோய்

பலன்

பயன்

பலன்

பயன், விளைவு

பலஹீனம்

வலுக்குறைவு

பலாத்காரம், பலவந்தம்

வலு கட்டாயம்

பலி இரை,

காணிக்கை, வேள்வி, கடவுளிடம் ஒப்பு வித்தல்

பலித்தல்

கை கூடுதல், பயன் தருதல்

பவனம்

வீடு

பஜார் (பார்சி)

சந்தை, அங்காடி

பாக்கியம்

பேறு, செல்வம், நல்வினை

பாசம்

தளை, கட்டு, கயிறு, அன்பு

பாடியம், பாஷியம்

அகலவுரை, விரிவுரை, பேருரை

பாணி

கை

பாதகம்

தீமை, கேடு

பாதம்

தாள், கால், அடி

பாதரட்சை

காற்பாடு, மிதியடி

பாதித்தல்

வருத்துதல், தடை செய்தல், இழத்தல்

பாதிப்பு

இழப்பு, வருத்துதல்

பாதை

வழி, பாட்டை

பாத்தியம்

உரிமை

பாத்திரம்

ஏனம், கலம், தகுதி உரிமை

பாபமோசனம்

தீவினை நீக்கம்

பாபி

தீயோன்

பாயுரு

எருவாய்

பாரபட்சம்

ஒருதலைச் சார்பு, ஓரவஞ்சனை

பாரம்

சுமை, பொறை, கடமை

பாரியா, பாரியை

மனைவி

பார்வதி

மலைமகள்

பாலகன்

குழந்தை

பாலப்பருவம்

பிள்ளைப்பருவம்

பால்யர்

இளைஞர்

பாவனை

கற்பனை, ஒப்பு, எண்ணம், நினைப்பு

பாவித்தல்

துய்த்தல்

பானம், பாநகம்

பருகுநீர், குடிநீர்

பாஸ்கரன்

பகலோன்

பாஷணம்

நஞ்சு

பாஷை

மொழி

பிங்கலை

வலது மூச்சு

பிசாசு

பேய், அலகை

பிச்சை, பிட்சை

இரப்பு, ஐயம்

பிச்சைக்காரன்

இரப்போன்

பிஞ்ஞகம்

தலைக்கோலம்

பிடிவாதம்

விடாப்பிடி, ஒட்டாரம், முரண்டு

பிதா

தந்தை, தகப்பன், அத்தன

பிதிரார்ச்சிதம்

முன்னோர் தேட்டம்

பிதிர்க்கடன்

மூதாட்கள் கடன், தென்புலத்தார் கடன்

பிநாகம்

வில்

பிந்நம்

சிதைவு, வேறுபாடு

பிரகடனம்

விளம்பரம்

பிரகதாம்பாள்

பெரியநாயகி

பிரகஸ்பதி

வியாழன்

பிரகாசம்

ஒளி, துலக்கம், வெளிச்சம்

பிரகிருதி

இயற்கை, பகுதி

பிரக்கினை

உணர்வு

பிரசங்கம்

விரிவுரை, சொற்பொழிவு

பிரசண்டமாருதம்

பெரும் புயல், பெருங்காற்று

பிரசவம்

பிள்ளைப்பேறு, கருவுயிர்ப்பு

பிரசாதம்

கடவுளுணா, தேவுணா, படைப்பு, அருள்

பிரசாரம்

பரப்புதல், பரப்புரை

பிரசித்தி

வெளிப்படை, அறிவிப்பு, புகழ்பரவல்

பிரசுரம்

வெளியீடு

பிரச்சனை, பிரச்சினை

சிக்கல், உறல்வு,சச்சரவு

பிரணவம்

ஓங்காரம்

பிரதட்சிணம்

வலம் வருதல்

பிரதானம்

முதற்பொருள், தலைமைப் பொருள், அடிப்படை

பிரதானம்

முதன்மை, சிறப்பு

பிரதி

படி

பிரதி தினம்

நாடோறும், ஒவ்வொரு நாளும்

பிரதிகூலம்

மாறுபாடு, எதிர்

பிரதிக்கினை

உறுதி, ஆணை, மேற்கோள்

பிரதிநிதி

பகராளி, நிகராளி

பிரதிநிதி

ஆணையாளர்

பிரதிபலன்

கைமாறு, மாற்றுப் பயன்

பிரதியுபகாரம்

கைம்மாறு

பிரதிவாதி

எதிர் வழக்காளி

பிரதிஷ்டை

நிலைபெறுத்தல், கோயில் கொள்ளுவித்தல்

பிரதேசம்

இடம்

பிரத்தாபம்

அறிவித்தல் வெளிப்படுத்தல்

பிரத்தியக்ஷம்

கண்கூடு. தெளிவு

பிரத்தியேகம்

தனிமை

பிரநிதித்துவம்

பிரபஞ்சம்

உலகம்

பிரபந்தம்

நூல், நூற்றொகுதி

பிரபலம்

புகழடை, புழ்பெற்ற, பலர் அறிந்த

பிரபல்லியம்

புகழ், முதன்மை, சிறப்பு

பிரபாவம்

புகழ், பெருமை

பிரபு

பெருந்தகை, பெருஞ் செல்வன், தலைவன்

பிரமசாரி

மணமாகாதவன்

பிரமா

நான்முகன்

பிரமாணம்

அளவை, தலைமை, மேற்கோள், ஆணை, கட்டளை

பிரமாண்டம்

பேருலகம்

பிரமாதம்

மிகுதி

பிரமானந்தம்

பேரின்பம்

பிரமித்தல்

மலைத்தல், திகைத் தல், மருளல்

பிரமுகர்

பெருஞ்சிறப்பினர், பெருந்தகை, பெரும் புள்ளி

பிரமேயம்

அளக்கப்படும் பொருள்

பிரமை

மருள், மயக்கம்

பிரமை

மயக்கம், அறியாமை

பிரமோற்சவம்

பெருவிழா

பிரயத்தனம்

முயற்சி

பிரயாசை

முயற்சி, வருத்தம், பாடு, உழைப்பு, தொல்லை

பிரயாணம்

பயணம், வழிப் போக்கு, வழிச்செலவு

பிரயோகம்

பயன்படுத்துகை, செலுத்துகை, மேற்செலுத்துகை,

பிரயோசனம்

பயன் செலவு

பிரயோஜனம்

பயன், ஊதியம், உதவி

பிரலாபம்

புலம்பல்

பிரவர்த்தி

முயற்சி, செய்கை

பிரவாகம்

வெள்ளப்பெருக்கு

பிரவேசம்

நுழைவு, முயற்சி

பிரளயம்

அழிவுகாலம், உலக ஒடுக்கம், வெள்ளம்

பிரளயாகலர்

இருமலக்கட்டினர்

பிராகாமியம்

நிறைவுண்மை

பிராகாரம்

கோயிற் சுற்று

பிராணவாயு

உயிர்க்காற்று, உயிர்வளி, உயிர்ப்பு

பிராணி

உயிரி, சிற்றுயிர்

பிராது (அராபி)

முறையீடு, முறைப்பாடு

பிராப்தம்

ஊழ்வினை

பிராப்தி

விரும்பிய தெய்தல்

பிராமணன்

பார்ப்பான்

பிராயச்சித்தம்

கழுவாய்

பிரார்த்தனை

நேர்த்திக்கடன், வேண்டுகோள்

பிரியம்

அன்பு, விருப்பம்

பிரீதி

அன்பு, உருக்கம், அவா

பிருதிவி

மண்

பிரேதம்

பிணம்

பிரேரணை

அவைப்படுத்தம், அவை முன் வைப்பு, முன்மொழி

பிரேரேபித்தல்

முன்மொழிதல்

பீசம்

முளை, விதை

பீடம்

இருக்கை, மேடை

பீடித்தல்

வலிந்து பற்றுதல், துன்புறுத்துதல், பற்றி துயர் செய்தல்

பீடை

துன்பம், பீழை, நோய்

பீதாம்பரம்

பொற்பட்டாடை

பீதி

அச்சம், விதிர்விதிப்பு

புண்ணிய திநம், புண்ணிய தினம்

நன்னாள்

புண்ணிய பாவம்

நல்வினை தீவினை, அறம் மறம்

புண்ணியம்

நல்வினை, அறம், நற்கருமம், தருமம்

புதன்

அறிவன்

புத்தி

உணர்ச்சி, அறிவு

புத்திரன்

புதல்வன், மகன், மைந்தன், கான்முளை

புத்திரி

புதல்வி, மகள்

புயபலம், புஜபலம்

தோள் வலிமை

புராணம்

பழங்கதை, பழைய, வரலாறு

புராதனம்

பழமை, தொன்மை

புருஷடன்

ஆண்மகன், கணவன்

புருஷார்த்தம்

உறுதிப் பொருள்

புரோகிதன்

வேள்வி செய்வோன்

புவனி, புவி

நிலம், உலகம், நிலத்தரை, இடம்

புளகாங்கிதம், புளகிதம்

மயிர் சிலித்தல், பெரு மகிழ்ச்சி

புளங்காகிதம்

மயிர் சிலிர்ப்பு, பெருமகிழ்ச்சி

புனர்ப்பாகம்

சோற்றின் மறுபால், தெளு

புஸ்தகம், புத்தகம்

சுவடி நூல்

புஷ்டி

பருமன், தடிப்பு

புஷ்பம், புட்பம்

பூ, மலர்

புஷ்பராகம்

வெள்ளைக்கல்

புஷ்பவதி

பூப்பானவள்

பூகம்பம்

நில நடுக்கம்

பூகோள சாஸ்திரம்

நில நூல்

பூசாரி

வழிபாடு செய்வோன்

பூசை

வழிபாடு, வணக்கம்

பூச்சியம்

இன்மை, அருமை, சுழியம்

பூணூ

பூதகரமான

பூதம்

முதற்பொருள், முதல்புலன், பேய்

பூதாகாரம்

மிகப் பருத்து, பேறுரு

பூமி

நிலம், உலகு

பூரணம்

நிறைவு, எல்லாம்

பூரித்தல்

நிறைதல்

பூர்த்தி

முடிவு, நிறைவு

பூர்வ

பண்டைய,

பூர்வ ஜென்மம்

முன்பிறப்பு

பூர்வபக்ஷம்

வளர்பிறை

பூர்விகம்

பழைமை

பூஷணம்

அணிகலன், அணி

பெளதிக சாஸ்திரம்

இயற்கைப் பொருள் நூல், இயற்பியல் நூல்

பெளத்திரன்

பேரன்

பெளவம்

கடல்

பேணி

பேணுதல்

பேதம்

ஒவ்வாமை, வேற்றுமை, வேறுபாடு

பேரம் பேசு

பேரார்

பைத்தியம்

மனநோய், பித்தியம்

பைத்தியம்

பித்து, வெறி, கோட்டி

பொக்கிஷ

சாலைகருவூலம்

பொக்கிஷம் (தெலு)

பொருட் களஞ்சியம்

பொருளாதாரம்

போகம்

இன்பம், துய்ப்பு, நுகர் பொருள்

போதனை

கற்பித்தல்

போதை

வெறி, மயக்கம்

போநகம்

சோறு, உணவு

போஜனம்

உணவு, சோறு, உண்டி, ஊண்

போஷகர்

ஊட்டகர்

போஷணை

நுகர்பொருள்

பௌத்திரி

பேர்த்தி

பௌர்ணமி, பூரணை

முழுநிலா

மகத்துவம்

மேன்மை,பெருமை

மகா

பெரிய, மிகுதி, மேன்மை

மகாத்மா

பெரியோன்

மகாராசன்

அரசன், செல்வன்

மகிமா

பருமை

மகிமை

பெருமை, மேன்மை

மகுடம்

தலையணி, முடி

மசானம், மயாநம்

சுடுகாடு

மச்சம்

மீன்

மணிபூரகம்

மேல் வயிறு

மண்டூகம்

தவளை

மதம்

கொழுப்பு, கொள்கை

மது

கள், தேன்

மதுகரம்

வண்டு

மத்திபம், மத்திமம்

நடுநிலை, நடு

மத்தியஸ்தம்

தீர்ப்பாயம், நடுவராயம்

மத்தியானம்

நண்பகல்

மநசு

உள்ளம், மனம்

மநநம்

இடையறா நினைவு

மநப்பூர்வம்

முழுமனது

மநஸ்தாபம்

துன்பம், மனவருத்

மநோகரம்

உள்ளக்கவர்ச்சி, இனிமை

மநோராச்சியம்

மனக்கோட்டை, வீண் எண்ணம்

மந்தம்

செரியாமை, சோம்பல்

மந்தாரம்

மப்பு, மழைவானம்

மந்திரம்

மறைமொழி

மந்திரி

அமைச்சன்

மமகாரம்

எனதென்றல்

மரணபரியந்தம்

இறக்குமளவும்

மரணம்

சாவு, இறப்பு, சாக்காடு

மரணை, ஸ்மரணை

நினைவு, உணர்ச்சி

மரியாதை

மதிப்பு, நன்னடப்பு, மதிப்புறவு

மனிதன்

மாந்தன்

மாகாணம்

மாநிலம், வட்டாரம்

மாசூல் (இந்துஸ்)

விளைவு

மாட்சிமை

மாதம்

திங்கள்

மாதா

தாய், அன்னை

மாதாந்தம்

திங்களிறுதி

மாத்சரியம். மாற்சரியம்

பகைமை, பொறாமை

மாத்திரம்

மட்டும்

மாத்திரை

அளவு

மாநபங்கம்

பெருமைக் குறைவு, மானக்கேடு

மாநியம்

இறையிலி நிலம், நன்கொடை, நிலக்கொடை, மாணியம்

மாந்தம்

செரியாமை

மாமிச பட்சணம்

ஊனுணா

மாமிசம்

இறைச்சி, ஊன், புலால்

மாயை

மருட்சி / இல்லாதொன்று

மார்க்கம்

வழி, நெறி

மாலுமி

மீகாமன், கலவலன், நாவாய் ஓட்டி, கப்பலோட்டி

மானுடம்

மாந்தரினம்

மிசிரம்

கலப்பு

மிதம்

அளவு, மட்டு

மித்திரன், மித்துரு

நட்பு, நண்பு

மிருகம்

விலங்கு

மிருதங்கம்

மத்தளம்

மிருது

மென்மை, நொய்மை

மிலேச்சன்

அறிவிலான், வேடன்

மீனாட்சி

கயற்கண்ணி

முகஸ்துதி

முகமன்

முகூர்த்தம்

முழுத்தம், நல்

முக்கியம்

முதன்மை வேளை, இன்றியமையாத

முத்தி

வீடுபேறு

முத்திரை

அடையாளம், பொறி

மூடர்

அறிவிலார்

மூடிகம், மூஷிகம்

பெருச்சாளி

மூர்க்கன்

அறிவிலான், முருடன்

மூர்ச்சை

அறிவு மயக்கம், களைப்பு, உணர்ச்சியின்மை

மூர்த்தி

கடவுள்

மூலதனம்

முதற்பொருள், விடு முதல்

மெளட்டியம்

அறியாமை

மெளனம்

அடக்கம், பேசாமை

மேகம்

முகில், எழிலி, வான்

மேஷம்

ஆடு

மோகம்

அவா, மயக்கம், பெரு வேட்கை, விருப்பம், மருள்

மோட்சம்

வீடு, துறக்கம்

மௌனம்

பேசாமை, அமைதி

யதார்த்தம்

உண்மை, இருப்புநிலை, மெய்ந்நிலை, நடப்பு

யதார்த்தம்

உண்மைநிலை, இருப்புநிலை

யதேஷ்டம்

மிகுதி

யத்தனம்

முயற்சி

யாகம்

வேள்வி

யாகம்

வேள்வி, வழிபாடு, இரப்பு

யாசகம்

இரப்பு

யாசித்தல்

இரத்தல்

யாதவன்

இடையன்

யாத்திரை

வழிச்செலவு, வழிப் பயணம், ஊர்ப்ப யணம்

யுகம்

ஊழி

யுத்தகளம்

போர்முனை, போர்கள்ம, அமர்க் களம்

யுத்தி, யுக்தி

சூழ்ச்சி, பொருந்துமாறு

யூகம்

நுண்ணறிவு, சூழ்ச்சி, கருங் குரங்கு

யூகி

கருது

யோகக்ஷேமம்

நலச் செய்தி

யோகம்

தவநிலை, ஒன்றுதல், மனவொருக்கம், நல்வினை

யோக்கியம், யோக்கியதை

தகுதி

யோசனை

சிந்தனை, அறிவுறை, கருத்து, திட்டத் ஓர்வு, ஆராய்ச்சி

ரசம்

சுவை

ரசா, ரஜா

விடுமுறை, ஓய்வு

ரசீது

பற்றுமுறி, பற்றுச் சீட்டு

ரணம்

போர், புண்

ரஸ்தா

பெரிய தெரு, பாட்டை

ருசுப்படுத்தல்

மெய்ப்பித்தல்

ருதுமங்களஸ்நானம்

பூப்பு நீராட்டு

ரூபம்

வடிவு, உருவம்

லாயம்

வகித்தல்

பொறுத்தல், பூணல், ஏற்றல்

வக்கிரம்

வளைவு

வக்கிரம்

போறாமை, வஞ்சனை, கொடுமை,கோணல் வழி

வசநம்

உரைநடை

வசந்தம்

தென்றற்காற்று, இளவேனில், மணம்

வசம்

வசித்தல்

உறைதல், வாழ்தல்

வசியம், வசீகரம்

கவர்ச்சி

வசூல்

ஈட்டல், தொகுத்தல், தண்டல்

வச்சிரம்

உறுதியானது

வண்ணம், வர்ணம்

நிறம், எழில், அழகு

வதநம்

முகம்

வதந்தி

பேச்சு, பலரறி சொல், பொய்ச் செய்தி பரப்புதல்

வதுவை

மணம், மணப்பெண்

வதூ

பெண்

வநபோசனம் –

சோலையுணா

வநம்

காடு, தோப்பு

வநவாசம்

காடுறை வாழ்க்கை

வந்தனம்

வணக்கம், வழிபாடு

வந்தனோபசாரம்

வணக்கவுரை

வமிசம், வம்சம்

கால்வழி, தலை முறை

வம்சாவழி

மரபு வழி, பரம்பரை

வயசு, வயது

ஆண்டு, அகவை

வயம்

அதுவாதல், வழி

வயோதிகம்

முதுமை

வரம்

பேறு, மேன்மை, அருள்

வருடம்

ஆண்டு, ஒழுங்கு

வருணம்

நிறம், குலம்

வருணனை

ஒப்பனை

வருணி

புனைந்துரை, மிகைப்படக் கூறு

வர்க்கம்,

வருக்கம், இனம், வகுப்பு

வர்த்தமானம்

செய்தி

வல்லபம்

வலிமை, ஆற்றல், திறம்

வஸ்திரம்

ஆடை, துணி, கூறை

வஸ்து

பொருள்

வாகனம்

ஊர்தி, அணிகம்

வாக்கியம்

சொற்றொடர்

வாக்கு

வாயுரை, சொல், மொழி

வாக்குத்தத்தம்

உறுதிமொழி

வாக்குமூலம்

உறுதிச் சொல்

வாசகம்

சொல்

வாசகர்கள்

வாசம்

மணம், இருப்பு

வாசனை

மணம்

வாஞ்சை

விருப்பம், அவா

வாதம்

காற்று, குளிர்ச்சி, காற்றுப்பிடிப்பு, வழக்கு

வாதனை

துன்பம், வருத்தம்

வாதித்தல்

உறழாடுதல், ஏரணமாடுதல், வழக்கிட்டுரைத்தல்

வாதித்தல்

வழக்கிடுதல்

வாது

சூளுறை, தருக்கம், ஏரணம், சண்டை

வாத்சல்யம்

அன்பு, விருப்பம்

வாத்தியம்

இசைக் கருவி

வாநரம்

குரங்கு

வாந்தி

வாயாலெடுப்பு, கக்கல்

வாந்தி பேதி

கக்கற் கழிச்சல்

வாமம்

அழகு, இடப்பக்கம்

வாயு

கால், காற்று

வாரம்

கிழமை, அன்பு

வாராவதி

பாலம்

வார்த்தை

சொல்

வாலிபம்

இளமை

விகடன்

பகடி, வேடிக்கை

விகற்பம், விகாரம்

வேறுபாடு

விகாரம்

அழகின்மை, வேறுபாடு

விகிதம்

விழுக்காடு

விகிதம்

நேயம், நட்பு, விழுக்காடு

விக்கிநம்

இடையூறு, தீங்கு

விக்கிரமம்

உருவம், பருப் பொருளுரு

விசாரணை

விசாரணை

ஆராய்ச்சி, கேள்வி

விசாரம்

கவலை, எண்ணம்

விசாரித்தல்

விசாலம், விஸ்தீரணம்

விரிவு, அகலம், பெருக்கம்

விசித்திரம்

வியப்பு, புதுமை

விசுவாசம்

நம்பிக்கை, உண்மை, நன்றிக் கடன்

விசேஷம்

மேன்மை, சிறப்பு

விச்சை,

வித்தை அவுரி

விஞ்ஞாபனம்

விண்ணப்பம், முறையீடு, வேண்டுகோள்

விஞ்ஞானகலர்

ஒரு மலக்கட்டினர்

விதண்டாவாதம்

அழிவழக்கு, வெற்று வழக்கு

விதந்து, விதவை

கைம்பெண், அறு தாலி

விதம்

வகை, ஆறு, வழி

விதி

ஊழ், தெய்வம், முறை, செயற்கை, கட்டளை

விதேயன்

பணிவுள்ளவன்

வித்தியாசம்

வேறுபாடு, ஏற்றத் தாழ்வு, வேற்றுமை

வித்துவான்

புலவன்

விநயம்

வணக்கம், அறிவு

விநாயகர்

பிள்ளையார்

விநாயகர் சதுர்த்தி

பிள்ளையார் நோன்பு

விந்து

ஒலிமுதல்

விந்தை, விநோதம்

புதுமை

விபச்சாரி, வியபிசாரி

ஒழுக்கமிலாள்

விபத்து

இக்கட்டு, இடையூறு

விபரீதம்

வேறுபாடு, திரிபு

விபூதி

திருநீறு, நீறு

விமர்சகர்கள்

திறனாய்வாளர்கள்

விமர்சனம்

திறனாய்வு

விமர்சனம்

விமோசநம்

நீக்கம், விடுதலை

வியவகாரம்

வழக்கு

வியாக்கியாநம்

விரிவுரை

வியாசம்

கட்டுரை

வியாச்சியம்

வழக்கு

வியாதி

நோய், பிணி

வியாபாரம்

வாணிபம், கொண்டு விற்றல், பண்டமாற்று

வியாஜம்

தலைக்கீடு

விரதம்

நோன்பு, தவம்

விருச்சிகம்

தேள்

விருட்சம்மரம்

விருத்தன்

கிழவன், முதியோன்

விருத்தாசலம்

பழமலை

விருத்தாந்தம்

வரலாறு

விருத்தி

ஆக்கம், பெருக்கம்

விரோதம்

பகை, முரண், மாறுபாடு

விலாசம்

முகவரி

விவகாரம்

பூசல், விளக்கச் செய்தி, நிகழ்ச்சி, நடத்தை

விவகாரம்

வாய்பாடு, வழக்கு

விவசாயம்

பயிர்த்தொழில், உழவு தொழில், வேளாண்மை

விவரணம்

விளக்கம்

விவரம்

விளக்கம்,

விவரித்திருக்கிறேன்

விவாகம்

திருமணம், மன்றல்

விவாதம்

வழக்கு

விவாதி

உறழாடு, வழக்காடு, மாற்றமாடு உறழாடன், முறையீட்டாளன்

விவேகம்

பகுத்தறிவு, நுண்ணறிவு

விவேகம்

பகுத்தறிவு, அறிவு வீதம்,

வினியோகம்

வழங்கீடு, பிரித்து வழங்கள், வழங்கள்

விஜயம்

வெற்றி, எழுந்தருளல்

விஸ்தரிப்பு

விரிவாக்கம், பெருக்கம், தீட்டிப்பு

விஸ்தாரம்

விரிவு

விஸ்வரூபம்

பூதம்

விஷமத்தனம்

நேர்மையின்மை, கொடுஞ்செயல், இடக்குச் செயல், கடும் குசும்பு, தீக்குறும்பு, கரடு முரடு

விஷமி

தீக்குறும்பன்

விஷம், விடம்

நஞ்சு

விஷயம்

செய்தி, நிகழ்ச்சி, ஒன்றுக்குரியது, சிறப்பியல்புடையது

விஷயம், விடயம்

பொருள், நுதலிய பொருள்

விஷ்ணு, விட்டுணு

திருமால்

வீதி

தெரு

வீரர்

மள்ளர், மறவர்

வீரியம்

ஆற்றல், வலிமை

வெகுமானம்

பரிசு, கொடை

வேகம்

விரைவு

வேதம்

மறை

வேதனம்

கூவி

வேதனை

துன்பம்

வேதாந்தம்

மறைமுடிவு

வேதாரண்யம்

மறைக்காடு

வேதியர்

அந்தணர், பார்ப்பார்

வேஷம், வேடம்

கோலம்

வைகுண்டம்

திருமாலுலகு

வைசூரி

அம்மை நோய்

வைடூரியம்

பூனைக்கண்மணி, ஒளிமணி

வைதிகம்

மறையியல் நெறி

வைத்தியம்

மருத்துவம்

வைபவம்

கொண்டாட்டம், நிகழ்ச்சி

வைரம், வயிரம்

கூர்மை, ஒளிமணிக்கல், காழ்ப்பு

வைராக்கியம்

வெறுப்பு

ஜலசந்தி

கடலிணைக்கால்

ஜனம்

மக்கள்

ஜன்னல்

பலகணி

ஜாகை

தங்குமிடம், வீடு

ஜாக்கிரதை

விழிப்பு, உன்னிப்பு, எச்சரிக்கை

ஜாடி

தாழி

ஜாதகம், சாதகம்

பயிற்சி, பிறந்த நாட்குறிப்பு, உதவி, காரியங்கை கூடல்

ஜீரணம், சீரணம்

செரித்தல், பழுது

ஜீவகாருண்ணியம், சீவகாருண்ணியம்

உயிர்களிடத்தன்பு, அருள் ஒழுக்கம்

ஜீவனம், சீவனம்

பிழைப்பு

ஜீவன்

உயிர்

ஜீவியம் சீவியம்

வாழ்நாள், பிழைப்பு, வாழ்க்கை

ஸ்தம்பித்தல்

அசையாது, செயலற்று

ஸ்திரி, திரீ

பெண்

ஸ்திரீதனம், ஸ்ரீதனம்

மகளுக்குக் கொடுக்கும் கொடை, மகட்கொடை

ஸ்தூபி, தூபி

முடி (கோயில் முதலியவற்றின் முடி)

ஸ்தூலம், தூலம்

பருமை

ஸ்ரீமத்

திருவாளர்

ஸ்ரீலஸ்ரீ

மறைத்திருவாளர்

ஷரத்துகள்

ஒப்பந்தக்கட்டுLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *